'ரோலக்ஸ்' படம் எப்போது தொடங்குகிறது? - சூர்யா கொடுத்த அப்டேட்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படத்தில், 'ரோலக்ஸ்' என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா. அப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனியாக ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். இருப்பினும், விக்ரம் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும், அந்த படம் இன்னும் தொடங்கப்படாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது அதுகுறித்து சூர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''ரோலக்ஸ் படம் குறித்தோ அல்லது லோகேஷ் கனகராஜின் இயக்கம் குறித்தோ தன்னிடம் எந்த அப்டேட்டும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது, லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார். அதே நேரத்தில், அவர் திட்டமிட்டிருந்த 'விக்ரம் -2, கைதி -2' ஆகிய இரண்டாம் பாகங்களும் தாமதமாகி வருவதால், ரோலக்ஸ் படம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.