ஜனநாயகன் வெற்றி படமாகுமா.... வசூலில் சாதனை படைக்குமா....
ஒருவழியாக தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் 50 கோடியும், உலக அளவில் 150 கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்று படக்குழு கணக்கு போட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
தமிழகத்தில் 25 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. உலக அளவில் 80 கோடி வரை மட்டுமே வசூல் வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். ஜனநாயகன் படம் ஏற்கனவே நெட்டில் வெளியாகிவிட்டது. அதை பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து படம் பார்க்க தயாராக இல்லை. தவிர, தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படவில்லை. மேலும், வியாழக்கிழமை என்பதால் அதிக கூட்டம் வரவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது 16 வயதுக்கு கீழ் உள்ளவர் படத்தை பார்க்க முடியாது. இதே காரணங்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்தது. ஆகவே, முதல் நாளில் தமிழகத்தில் 30 கோடியை தொடவில்லை.
இதற்குமுன்பு பீஸ்ட் - ரூ. 35 கோடி, லியோ - ரூ. 34 கோடி, குட் பேட் அக்லி - ரூ. 31 கோடி, கோட் - ரூ. 30.8 கோடி, கூலி - ரூ. 30 கோடி, சர்க்கார் - ரூ. 29 கோடி
வலிமை - ரூ. 28 கோடி, விடாமுயற்சி - ரூ. 27 கோடி, ஜெயிலர் - ரூ. 27 கோடி, மாஸ்டர் - ரூ. 26 கோடியை தமிழகத்தில் வசூலித்து இருந்தது. அந்த சாதனையை ஜனநாயகன் முறியடிக்கவில்லை.
வெள்ளி, சனி, ஞாயிறு புக்கிங் ஓரளவு மட்டுமே இருக்கிறது. ஆனால், திங்கள் கிழமைக்குபின் இந்த கூட்டம் இருக்குமா என தெரியவில்லை. படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்து கொண்டு இருக்கிறது. தவிர, ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியாத நிலை. ஆகவே, அடுத்த வாரம் படத்தின் வசூல் வெகுவாக குறைய வாய்ப்பு.
விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மட்டுமே படத்தை ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். ஜனநாயகன் பெரிய வெற்றியை பெற வாய்ப்பு குறைவு. ஒருவேளை விஜய் தரப்பு, தவெக.,வின் வேறு திட்டம் போட்டால் இன்னும் சில நாட்களுக்கு பார்வையாளர்களை தியேட்டருக்கு அனுப்பலாம்.