உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை

ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை

‛அமரன்' படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற உள்ளார் ஜிவி பிரகாஷ். அதற்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளரும், அவரது தாய்மாமாவுமான ஏஆர் ரஹ்மான் நமது குடும்பத்திற்கான பத்தாவது தேசிய விருது என வாழ்த்தி உள்ளார். அது எப்படி 10 என்ற கணக்கு கேட்பவர்களுக்காக.

இதற்கு முன்பு ஏஆர் ரஹ்மான் ஏழு தேசிய விருது வாங்கியுள்ளார். 1992ம் ஆண்டு ரோஜா படத்திற்காகவும், 1996ல் மின்சார கனவு படத்திற்காகவும், 2001ல் லகான் படத்திற்காகவும், 2002ல் ‛கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்காகவும், 2014ம் ஆண்டு ‛மாம்' மற்றும் காற்று வெளியிடை படத்திற்காகவும், 2021ம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காகவும் மொத்தம் ஏழு தேசிய விருது வாங்கியுள்ளார். இதில் லகான், மாம் ஆகியவை ஹிந்தி படங்கள். மா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு பின்னணி இசை பிரிவில் தேசிய விருது வாங்கியுள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷ், ‛சூரரை போற்று , அமரன்' படங்களுக்கு சிறந்த பின்னணி இசை பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலுக்காக வாத்தி படத்துக்கு தேசிய விருது வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருது வாங்கிய இன்னொரு இசையமைப்பாளர் இளையராஜா. அவர் 5 தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கம் (1983), ருத் ரவீணை(1988) ஆகிய தெலுங்கு படங்களுக்காகவும், சிந்து பைரவி,(1985) தாரை தப்பட்டை(2015) ஆகிய தமிழ் படங்களுக்காகவும், பழசிராஜா (2009) மலையாள படத்துக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார். இதில் பழசிராஜா, தாரைதப்பட்டை படங்களுக்கு பின்னணி இசைக்காக பெற்றார். தாரை தப்பட்டை விருதை, பழசிராஜா விருதை அவர் வாங்க செல்லவில்லை. பின்னணி இசை பிரிவுக்காக புறக்கணித்தார்.

அதேசமயம் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அவரது காலக்கட்டத்தில் ஒரு தேசிய விருது கூட தரப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

vidhu, chennai
2026-07-24 11:58:47

MSV ஐயாவிற்கு விருது கிடைக்காதது விருதிற்கு அவமானம். அவர் எல்லா விருதிற்கும் அப்பாற்பட்டவர்.


shakti, vilupuram
2026-07-23 22:02:57

புறக்கணிப்பா ???


Thanu Srinivasan, Chennei
2026-07-22 15:21:04

எம்.எஸ்.விஸ்வநாதனை போன்ற மிக சிறந்த இலை அமைப்பாளருக்கு ஒரு விருது கூட வழங்காதது கொடுமையிலும் கொடுமை. ஜாதி அடிப்படை ஒதுக்கீடு எப்படி பட்ட அயோக்கியதனமோ அதுபோன்றது தமிழக அரசின் கலைமாமணி விருது கூட வழங்கபடவில்லைn


DR. D. Vijayakumar
2026-07-21 19:26:36

கடந்த அரை நூற்றாண்டில் தமிழ் திரையுலகில் ஐயா MSV அவர்களின் பங்களிப்பு மறக்க மறைக்க மறுக்க முடியாததாகும். 1000 த்திற்கும் மேற்பட்ட திரைபட பாடல்களுக்கு இசையமைத்து அவை அன்றும் இன்றும் என்னென்றும் ரசிகர்களின் நினைவில் நீங்க இடம்பெற்றவையாகும். அந்த இசை மேதைக்கு விருது அளிக்காதது அந்த விருதுக்குத்தான் இழப்பு. ஒரு சில நாட்க்களிலேயே மறந்து போகும் இன்றைய பாடல்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம்பெற்றிருப்பதே அவருக்கு மக்கள் அவருடைய பாடல்களை கேட்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வழங்கும் விருது.