உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லெனின் சக்சஸ் : கண்ணீருடன் நன்றி சொன்ன பாக்யஸ்ரீ போர்ஸ்

லெனின் சக்சஸ் : கண்ணீருடன் நன்றி சொன்ன பாக்யஸ்ரீ போர்ஸ்

சமீபத்தில் தெலுங்கில் அகில் நடிப்பில் வெளியான 'லெனின்' திரைப்படம் வெற்றியைப் பெற்றுள்ளது. சொல்லப்போனால், அகிலின் பல வருட திரையுலகப் பயணத்தில் இதுதான் நல்ல வசூலுடன் கூடிய வெற்றி என்று சொல்லப்படுகிறது. அவருக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த பாக்யஸ்ரீ போர்ஸுக்கும் இந்தப் படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக 'மிஸ்டர் பச்சன்', 'காந்தா' உள்ளிட்ட படங்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருந்தாலும், அந்தப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் அவர் 'ராசியில்லாத நடிகை' என்பது போலவே ஒரு விமர்சனம் இருந்தது. அவரது சம்பளமும் ஒரு கோடி என்கிற அளவிலேயே இருந்தது.

தற்போது 'லெனின்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் வெற்றிச் சந்திப்பில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், ஒரு காலத்தில் திரையுலகில் தன்னை 'அன் லக்' (ராசியில்லாத) நடிகை என்று அழைத்ததால், தான் வருத்தமடைந்ததாகவும் லெனின் படத்தின், வெற்றி அதை மாற்றிவிட்டதாகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார்.

தற்போதைய சூழலில், தன்னுடைய சம்பளத்தை 2.5 முதல் 3 கோடி வரை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தி கேட்பதாகத் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு படத்தின் வெற்றியிலேயே அதிரடியாக 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பளத்தை உயர்த்துவது கொஞ்சம் ஓவர்தான் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் வட்டத்தில் ஒரு முணுமுணுப்பு எழுந்துள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !