உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் வீடு வாங்கிய ஸ்ருதிஹாசன்

சென்னையில் வீடு வாங்கிய ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவர் மும்பை சென்றுவிட்டார். அவரது தங்கை அக்ஷராஹாசன் கூட மும்பையில்தான் வசித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இரண்டு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. ஒன்று அவரது மக்கள் நீதிமய்யம் கட்சியின் அலுவலகம், மற்றொன்று அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம். இவை மட்டுமல்லாது ஈசிஆர் சாலையில் மிகப் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கடந்த சில வருடங்களாகக் கட்டி வருகிறார். சென்னையில் இதர இடங்களிலும் அவருக்கு சில வீடுகளும், கொடைக்கானலில் தேயிலைத் தோட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.



சென்னை வந்தால் கூட ஸ்ருதிஹாசன் ஹோட்டலில்தான் தங்குவாராம். அதே சமயம் அவரது அப்பா கமல்ஹாசனையும் வீட்டிற்குச் சென்று சந்திப்பார். ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட வீட்டில் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஆகியோர் தங்குவதற்கும் அறைகள், இதர வசதிகளுடன்தான் வீட்டை வடிவமைத்துள்ளார் கமல்.

இந்நிலையில் தற்போது சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு ஒன்றை ஸ்ருதிஹாசன் வாங்கியுள்ளாராம். அதன் கிரகப் பிரவேசப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அவரது தோழிகள் மட்டுமே சிலர் உடன் இருக்கிறார்கள். அப்பா கமல்ஹாசன், வேறு உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

sankar, Nellai
2026-07-15 10:33:19

திரவிட முன்னோடி தந்தை வீட்டில் பூசையா - பெரியார் பார்த்துக்கொள்வார்


Mani . V, Singapore
2026-07-15 06:04:37

சென்னைத் தோழனுக்கு சென்னையில் வீடு. மும்பைத் தோழனுக்கு மும்பையில் வீடு.


Keshavan.J, Chennai
2026-07-15 05:37:35

சினிமா மேடையில் மட்டுமே மகளும் தந்தையும் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அந்த உறவு சுமுகமாக இல்லை. குறைந்தபட்சம் ஸ்ருதிக்கு இந்து சடங்குகளில் நம்பிக்கை இருப்பது சந்தோஷம் அளிக்கிறது , ஏனென்றால் கமல் ஹாசன் குடும்பம் ஒன்று மறைமுக கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் அல்லது கம்யூனிச மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கமல் ஒரு தீவிர கடவுள் மறுப்பாளர்.