உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 18ல் மண்டாடி படத்தின் ப்ரோமோ பாடல் : ஸ்டைலிஷ் லுக்கில் வெளியான சூரி போஸ்டர்

ஜூலை 18ல் மண்டாடி படத்தின் ப்ரோமோ பாடல் : ஸ்டைலிஷ் லுக்கில் வெளியான சூரி போஸ்டர்

விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்த நடிகர் சூரி, தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன், மாமன் போன்ற படங்களில் நடித்தார். இதில் கொட்டுக்காளி வெற்றி பெறவில்லை என்றாலும் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்தது. கருடன், மாமன் படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்று சூரியின் மார்க்கெட்டை உயர்த்தின.

தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்துள்ளார் சூரி. அவரது திரைப்பயணத்திலேயே 75 கோடி என்ற அதிகப்படியான பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ பாடல் ஜூலை 18ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான போஸ்டரில் சூரி மிகவும் ஸ்டைலிஷ் ஆன உடையில் தோன்றுவதோடு, இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தின் பாடலில் அவர் அதிரடியாக நடனமாடியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற செப்டம்பர் 10ல் திரைக்கு வரும் இந்த மண்டாடி படத்தில் சூரியுடன் சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !