துல்கர் சல்மானின் ‛ஸ்ரீ ஸ்ரீ'
ADDED : 13 hours ago
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து, அசத்தி வருகிறார். படங்களும் தயாரிக்கிறார். தற்போது தெலுங்கில் தனது 41வது படத்தில் நடிக்கிறார். காதல் கதையில் உருவாகும் இப்படத்தை ரவி நெலகுடிதி இயக்குகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதுநாள் வரை படத்திற்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கு ‛ஸ்ரீ ஸ்ரீ' என பெயரிட்டு, படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தாண்டிலேயே படத்தை வெளியிட உள்ளனர்.