உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் காதல் முறிந்தது ஏன்? : மனம் திறந்த ஸ்வாசிகா

முதல் காதல் முறிந்தது ஏன்? : மனம் திறந்த ஸ்வாசிகா

லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ஸ்வாசிகா. கடந்த 15 வருடங்களாக திரையுலகில் நிலையான இடத்திற்கு போராடிய இவருக்கு லப்பர் பந்து சமீபத்தில் வெளியான நூறு சாமி திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளன. கடந்த வருடம் சின்னத்திரை நடிகரும் தனது காதலருமான பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்வாசிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு முதல் காதல் இருந்தது என்றும் அது கை கூடாமல் போனது ஏன் என்றும் மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்வாசிகா.

இது குறித்து அவர் கூறும்போது, எனக்கு இதற்கு முன்பு ஒரு காதல் இருந்தது. அது ஒன்றும் தவறான தேர்வு இல்லை. அந்த நபர் மிகுந்த தோற்றப் பொலிவுடையவராகவும், என்னை நன்கு மதிப்பவராகவும் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடிகள் அவரை மனதளவில் பாதித்தன. குடும்ப பிரச்னைகளையும், காதலையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த உறவு முறிவுக்கு வந்தது என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !