ஜூலை 10ல் ஜப்பானில் வெளியாகும் 'துரந்தர்'
ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 'துரந்தர்' திரைப்படம் வெளியானது. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகமே 1300 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு மூன்று மாதங்கள் கழித்து, கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, முதல் பாகத்தை விட அதிக வசூலையும் வரவேற்பையும் பெற்றது.
இரண்டு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 3000 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், தற்போது 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் ஜப்பானில் வரும் ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை, படத்தின் நாயகன் ரன்வீர் சிங் ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அதிரடி, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இந்தப் படம் இருக்கும்; அதனால் ஜப்பானியர்கள் திரையரங்கிற்கு வந்து இதைக் காண வேண்டும் என்றும் அந்த வீடியோ மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.