உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‛காளிதாஸ் 2'

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‛காளிதாஸ் 2'

உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. இங்கே படங்களை திரையிடுவது, விருது பெறுவது கவுரமான ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், சங்கீதா, அஜய் கார்த்தி நடித்த 'காளிதாஸ் 2 படம், 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாகி உள்ளது.

சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குனர் , தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக 'காளிதாஸ் 2' இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் பவானிஸ்ரீ உட்பட பலர் நடித்து இருந்தனர். சாம்.சி.எஸ் இயக்கி இருந்தார். ஒரு அபார்ட்மென்ட் சில கொலைகள் என்ற பாணியில் கதை நகர்ந்தது. தியேட்டரில் பெரிய வரவேற்பு பெறாவிட்டாலும், ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !