ரூ.100 கோடியை எட்டுமா ‛மா இன்டி பங்காரம்'
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛மா இன்டி பங்காரம்'. குடும்பம் கலந்த ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழில் ‛எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படம் திரைக்கு வந்து இதுவரை 75 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது வார இறுதியில் இருக்கும் இந்த படம் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று புக் மை ஷோ களத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 8,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் இப்படம் தொடர்ந்து வலுவான வசூலை பதிவு செய்து வருகிறது. அதனால் மா இன்டி பங்காரம் ரூ.100 கோடி வசூலை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்தில் சமந்தா உடன் குல்சன் தேவையா, திகந்து மன்சேல், கவுதமி, ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.