உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாழ்நாள் முழுவதும் மிஸ் பண்ண போகும் நினைவுகள்! - பாக்யராஜ் மகள் சரண்யா பதிவு

வாழ்நாள் முழுவதும் மிஸ் பண்ண போகும் நினைவுகள்! - பாக்யராஜ் மகள் சரண்யா பதிவு


திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவை கடுமையான சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதைவிட அவரது குடும்பத்தார் மிகப்பெரிய சோகத்தில் உறைந்திருக்கிறார்கள். திரை உலகினர் பலரும் இயக்குனர் கே.பாக்யராஜ் உடன் தாங்கள் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில் இயக்குனர் கே.பாக்யராஜின் மகளான சரண்யா பாக்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தான் சிறுமியாக இருக்கும்போது தனது தந்தை பாக்யராஜின் மடியில் அமர்ந்திருந்த புகைப்படம் மற்றும் அவருடன் விளையாடுவது மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அது மட்டுமின்றி தனது மொபைலில் இருந்த வாட்ஸ் அப் கால் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ஒவ்வொரு நாளும் பலமுறை டாடி என்ற பெயரில் வந்திருக்கும் கால் மற்றும் வீடியோ கால் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ள சரண்யா பாக்யராஜ், 'இதன் பிறகு என்னுடைய தினசரி கால் லாக் இப்படியே இருக்காது. என்னுடைய அதிகபட்ச மிஸ்ட் கால்கள் எல்லாமே உங்களிடம் இருந்து வந்தவை என்பதை இப்போதுதான் உணர்கிறேன்' என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !