பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி
பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், 73, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் விஜய் அஞ்சலி
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்த அவர், பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
திமுக., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், திமுக., தலைவருமான ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் கேஎன் நேரு, டிஆர் பாலு, ராசா உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தனியாக உதயநிதி, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசக., தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சீமான, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, சசிகலா, பிரேமலதா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
ரஜினி அஞ்சலிபாக்யராஜ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திரையுலகினர் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு ராதிகா, சரத்குமார், மணிரத்னம், பிரபு, விக்ரம் பிரபு, சமுத்திரகனி, ஏஎல் விஜய், ஹெச். வினோத், மன்சூர் அலிகான், பி வாசுஆர் சுந்தர்ராஜன், அர்ஜூன், பார்த்திபன், சுஹாசினி, இசையமைப்பாளர் தேவா, சந்தானபாரதி, சித்ரா லட்சுமணன், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சார்லி, சின்னி ஜெயந்த், சினேகன், லோகேஷ் கனகராஜ், ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீபிரியா, கவுண்டமணி, காஜா ஷெரீப், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்குமரன், இயக்குனர்கள் சங்கம் சார்பாக பேரரசு, சசி, ஏஆர் முருகதாஸ், பாண்டியராஜன், ஆர்கே சுரேஷ், ஜீவா, ராமராஜன், சுசீந்திரன், ஜெயராம், சிஆர் சரஸ்வதி, வையாபுரி, பரத், கலையரசன், நாசர், பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், புகழ், சுகன்யா, சேரன், மலையாள நடிகர் திலீப், இயக்குனர் பாலா, யார் கண்ணன், ஷகிலா, எஸ்வி சேகர், ஸ்ரீகாந்த், ராதாரவி, விமல், தியாகராஜன், பிரசாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.