உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜுன் தாஸின் கான்சிட்டி படத்தை பாராட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்

அர்ஜுன் தாஸின் கான்சிட்டி படத்தை பாராட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதாரவி, விடிவி கணேஷ், வடிவுக்கரசி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கான்சிட்டி. ஜூன் 26ம் தேதியான இன்று இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படம் குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த படம் அருமையாக உள்ளது. சகோதரர் அர்ஜுன் தாசுக்கு வாழ்த்துக்கள். எல்லா சென்டர்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கான் சிட்டி படக் குழுவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ் முக்கிய வில்லனாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதன் வெளிப்பாடாக இந்த படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !