உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேர் சொல்லும் பிள்ளை : கமல் பட தலைப்பில் கவின்

பேர் சொல்லும் பிள்ளை : கமல் பட தலைப்பில் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். தற்போது ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‛தண்டட்டி' படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை பெற்ற இயக்குனர் ராம் சங்கயா இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடத்தில் அறிவிப்பு வெளியானது.

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். இதில் கதாநாயகியாக லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பால சரவணன், இளவரசு நடிக்கின்றனர். படத்திற்கு 'பேர் சொல்லும் பிள்ளை' என வைத்துள்ளனர். இது 1987ம் ஆண்டில் கமல்ஹாசன், ராதிகா, கேஆர் விஜயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !