உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2000 கடிதங்கள் மற்றும் டைரிகளின் அடிப்படையில் உருவாகும் மீனா குமாரியின் பயோபிக்

2000 கடிதங்கள் மற்றும் டைரிகளின் அடிப்படையில் உருவாகும் மீனா குமாரியின் பயோபிக்

பாலிவுட்டில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரின் சுயசரிதைப் படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், 1930 முதல் 70-கள் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, 'கமல் அவுர் மீனா' என்கிற திரைப்படம் உருவாக இருக்கிறது.
1939-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா குமாரி, 1946-இல் 'பச்சன் கா கேல்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1972 வரை கிட்டத்தட்ட 100 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். அவருக்கும் இயக்குனர் கமல் அம்ரோகிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு, பின்னர் 12 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்தனர்.

இந்த நிலையில், தற்போது உருவாகவிருக்கும் அவரது பயோபிக் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சுமார் 2000-க்கும் மேற்பட்ட அவரது கடிதங்கள் மற்றும் அவரது டைரிகளை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மீனாகுமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைத்துறையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இயக்குனர் கமல் அம்ரோகியுடன் அவரது உறவு ஆகியவை இந்தப் படத்தில் சொல்லப்பட இருக்கின்றன. இதில் மீனா குமாரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !