உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயை அன்பாலோ செய்தாரா திரிஷா?

விஜயை அன்பாலோ செய்தாரா திரிஷா?


நடிகர் விஜய், நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல் முடிவில் முதல்வர் விஜயாக மாறியுள்ளார். அவருக்கு நேற்று (ஜூன் 22) 52வது பிறந்தநாள் என்பதால் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக விஜய் பிறந்தநாளைக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் நடிகை திரிஷா.

தேர்தலுக்கு முன்பாக ஒரே நிற உடை அணிந்து விஜயும் திரிஷாவும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வராக பதவியேற்ற விழாவில் பங்கேற்று முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அதன்பின்னர், நடிகர் அஜித்தின் தாயார் மறைவையொட்டி இரவில் ஒரே காரில் முதல்வர் விஜய், திரிஷா இருவரும் அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியிருந்தனர்.

இப்படியான நிலையில், இந்தாண்டு பிறந்தநாளைக்கு விஜய்க்கு வாழ்த்து சொல்லும்விதமாக எந்தவொரு பதிவும் போடவில்லை. விஜயுடன் நடித்த பல திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், திரிஷாவும் வாழ்த்து சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் திரிஷாவின் பாலோயர் லிஸ்டிலும் விஜய் பெயர் இல்லை. விஜயை அன்பாலோ செய்துவிட்டதாக எழுந்த தகவலுக்கு, திரிஷா இதுவரை விஜயை பாலோ செய்யவே இல்லை என்கின்றனர் ரசிகர்களும் தவெக கட்சியினரும். கீர்த்தி சுரேஷ், தனது கணவருடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக விஜய் பிறந்தநாளைக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவந்த திரிஷா, இம்முறை வாழ்த்து சொல்லாதது சிலபல கேள்விகளை எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !