ஜீவா படத்தின் டீசரில் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து!
ADDED : 8 hours ago
கடந்த 2009ம் ஆண்டு ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடித்த வெளியான படம் சிவா மனசுல சக்தி. அப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜீவா- ராஜேஷ் கூட்டணி மீண்டும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என்ற படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கும் 'சிவா மனசுல சக்தி'க்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்துள்ளார்.
இவானா நாயகியாக நடிக்க, பரிதாபங்கள் சுதாகர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசரை இன்று காலை 11 மணி 11 நிமிடங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்த படமும் ஒரு ஜாலியான கமர்சியல் கதையில் உருவாகி இருப்பது இந்த டீசர் காட்சிகளில் தெரிகிறது. மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஜூன் 22ம் தேதியான நாளை பிறந்தநாள் என்பதால் அவருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்கள்.