ரூ.76 லட்சத்திற்கு புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா
நடனக் கலைஞராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, நடன இயக்குநராக மாறி, பின்னர் நடிகர், இயக்குநர் என பல தளங்களில் வெற்றியை ருசித்தவர் நடிகர் பிரபுதேவா. தற்போது அவரது நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் ரிலீசுக்கு தயாராகவும், படப்பிடிப்பு நிலையிலும் இருக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்திய திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்கி வரும் நிலையில், பிரபுதேவாவும் எம்ஜி M9 பிரெசிடென்ஷியல் லிமோசின் என்கிற புதிய மாடல் எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த காரின் ஷோரூம் விலை சுமார் 75.90 லட்சம் ரூபாய் ஆகும். சொகுசு வசதிகளுக்காக பெயர் பெற்ற இந்த காரில் ஏழு ஏர்பேக் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஒருமுறை இதன் பேட்டரியை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 548 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.