தனக்கு பிடித்தமான சமீபத்திய திரைப்படம் குறித்த தகவலை வெளியிட்ட சமந்தா!
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். தமிழில், எங்கள் தங்கம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஜூன் 19ஆம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் ஆக்ஷன் மற்றும் குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் சமந்தா.
அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு பிடித்த சமீபத்திய திரைப்படம் எது என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, 'அப்செஷன்' என்று பதில் கொடுத்தார். உளவியல் ரீதியான திகில் மற்றும் திரில்லர் வகையைச் சார்ந்த இப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் அமோகமான வரவேற்பை வெற்றி பெற்று வருகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அப்செஷன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சாதாரண திரைப்பட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் இந்த படத்தின் சுவராஸ்ய கதை வெகுவாக ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.