உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரியாக ஒரு வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் கண்ணப்பா

சரியாக ஒரு வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் கண்ணப்பா

கடந்த வருடம் தெலுங்கில் புராண படமாக 'கண்ணப்பா' திரைப்படம் வெளியானது. நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகேஷ் குமார் சிங் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகி பின்னர் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது. கடந்த ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில், தற்போது ஒரு வருடம் கழித்து சரியாக மீண்டும், வரும் ஜூன் 27ஆம் தேதி இந்த படத்தை ரீ-ரிலீஸ் ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கண்ணப்பா வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வெள்ளித்திரையில் இந்த படத்தை கண்டுகளிக்க விரும்பும் ரசிகர்களுக்காக, குறிப்பாக ஆன்மீக பக்தர்களுக்காக தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !