பெத்தி : மூன்று 'டெலிடட் சீன்'களால் மாறிப் போன ஜான்வி கதாபாத்திரம்
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. 360 கோடிகளைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளிவந்ததுமே படத்தின் நாயகியான ஜான்வி கபூரை கிளாமருக்கு மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியதாக கடுமையான விமர்சனம் எழுந்தது. அது குறித்து உடனடியாக வருத்தம் தெரிவித்தார் படத்தின் இயக்குனர் புச்சிபாபு.
இப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட புச்சிபாபு சனா அது குறித்து மீண்டும் பேசினார்.
“ஜான்வியின் கதாபாத்திரம் அழுத்தமாகவும், முக்கியத்துவம் உள்ளதாகவும் தான் உருவாக்கப்பட்டது. படத்தில் ஜான்வி நடிப்பில் இடம் பெற்ற மூன்று முக்கியமான காட்சிகளை படத்தின் நீளம் கருத்தி நீக்க வேண்டியதாகிவிட்டது. அதனால், ஜான்வியின் கதாபாத்திரம் பற்றி இப்படி ஒரு விமர்சனம் வந்துவிட்டது.
புதன்கிழமை முதல் ஜான்வியின் இரண்டு காட்சிகளும், ஜெகபதி பாபுவின் ஒரு காட்சியும் படத்தில் புதிதாக இணைக்கப்பட உள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.
படம் வெளியான பின்பு இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் ஜான்வி சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.