உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சேயோன்' கிராமத்து கெட்டப் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

'சேயோன்' கிராமத்து கெட்டப் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!


'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'சேயோன்'. அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மதுரை வட்டார கதை களத்தில் உருவாகி வரும் இந்த சேயோன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் கடவுள் விருமாண்டி வேடத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் காட்சி இடம்பெற்றது. இப்படத்தில் இதுவரை தான் நடிக்காத ஒரு மாறுபட்ட கிராமத்து கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதை அது வெளிப்படுத்தியது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த 'சேயோன்' படத்தில் வேஷ்டி சட்டை அணிந்த கிராமத்து இளைஞனாக ஒரு மலை மீது தான் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !