உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கரண்ட் கட் : சமூக வலைதளங்களில் சிக்கிய மகேந்திரன்

கரண்ட் கட் : சமூக வலைதளங்களில் சிக்கிய மகேந்திரன்


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்படும் மகேந்திரன். தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வரும் இந்த நேரத்தில் அது குறித்து அவர் அளித்த பேட்டி பலரையும் கோபப்படுத்தி உள்ளது.

'கரண்ட் கட்' ஆவது குறித்து அவர் பேசுகையில், “எதற்கெடுத்தாலும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். இவ்வளவு நாட்களாக மின்சாரம் கட் இல்லாமல் ஜாலியாக இருந்தீர்கள். இப்போது பிரச்னை என்றால் ஆறு மாதம் பொறுத்துக் கொள்ள மாட்டீர்களா?. மைக் முன்னாடி நின்று ஏன் இப்படி நடந்தது என்று கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா?,” என்று பேசியுள்ளார்.

ஏற்கெனவே அடிக்கடி கரண்ட் கட் ஆவதால் கொதித்துப் போய் இருக்கும் மக்கள், இவரது இந்தத் திமிரான பேச்சால் இன்னும் கோபமாகி உள்ளார்கள். நேற்று முதல் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் விஜய் மீதும், தவெக மீதும் மக்களின் கோபம் இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. விஜய்க்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் இப்படி பலரும் தினுசு தினுசாகப் பேசுவது தவெக கட்சியினரிடமும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !