உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துரந்தர், பாரமுல்லா' படங்களைப் பாராட்டிய பவன் கல்யாண்

'துரந்தர், பாரமுல்லா' படங்களைப் பாராட்டிய பவன் கல்யாண்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், பெரும் வசூலைக் குவித்த 'துரந்தர்', மற்றும் 'பாரமுல்லா' ஆகிய படங்களைப் பற்றிப் பாராட்டியுள்ளார். சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் இந்தப் படங்களைப் பற்றி அவர் பேசுகையில்,

“எனக்கு 'துரந்தர்' பிடித்திருந்தது. அதில் இருக்கும் அந்தத் துணிச்சல் என்னைக் கவர்ந்தது. திரையரங்கிற்குச் செல்ல முடியாததால் என்னால் அதன் இரண்டாம் பாகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவர்கள் அதை உருவாக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது” என பேசியுள்ளார்.

'பாரமுல்லா' படம் பற்றிப் பேசுகையில், “எனக்கு திகில் படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஏனெனில் அவை என்னை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். என்னை வேறு எதையும் சிந்திக்க விடாமல் அவை என்னை, என் மனதை ஒருமுகப்படுத்தி அதன் வசப்படுத்திக் கொள்ள வைக்கிறது. இல்லையெனில் என் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தூக்கம் வராத நேரங்களில் திகில் படங்களைப் பார்ப்பேன். அப்போது என் மனம் சட்டென அமைதியடைந்துவிடும்.

1987, 89 வரையிலான காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியின்மையைப் பார்த்திருக்கிறேன். காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தையும், மற்ற சூழல்களையும் நான் உணர்ந்தேன். 'வெளியேறு' என்று யாராவது சொல்வதை நான் விரும்புவதில்லை. அது மிகவும் வேதனையான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் 'பாரமுல்லா' எனக்குப் பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !