உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்., 4ல் சூரியின் ‛மண்டாடி' படம் ரிலீஸ்

செப்., 4ல் சூரியின் ‛மண்டாடி' படம் ரிலீஸ்

எல்ரெட் குமார் தயாரிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்க, சூரி கதை நாயகனாக நடிக்கும் படம் ‛மண்டாடி. மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அதன் உடன் கட்டுமர படகு போட்டி பின்னணியில் வலுவான கதை பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது. வலுவான கதை சொல்லலுடன் படம் உருவாகி வந்தது. பலமாதங்கள் நடந்த இந்தபடப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து படத்தின் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செப்., 4ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !