வாசகர்கள் கருத்துகள் (1)
next tu, nee thandiye
அதன்பிறகு கமலை வைத்து 'சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி' படங்களும், ரஜினியை வைத்து 'கொடி பறக்குது' படமும் இயக்கினார். மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: ''அவரின் திறமை சாதனை பற்றி எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையில் நிறைய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து நிறைய அறிமுகப்படுத்தியவர் திரையுலகை வாழ வைத்தவர். இயக்குனர் தயாரிப்பாளர் என யாருக்கு பிரச்னை வந்தாலும் முதலில் குரல் கொடுத்து போராடியவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் பெயரை மறக்க மாட்டார்கள் என்றென்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.
தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. பிடித்தால் பிடித்திருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று மனதில் இருப்பதை சொல்பவர். உன்னை எனக்குப் பிடிக்கும் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னை பற்றி விமர்சனம் செய்வார். அவரிடம் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போன்று வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி என எல்லோருக்கும் நட்புடன் இருந்தவர் அன்போடு இருந்தவர். அவர் குணமாகி விடுவார் என்று தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள். அவர் என்றென்றும் நினைவில் உடன் இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.
next tu, nee thandiye