உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி

இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி

யு-டியூப் மூலம் பிரபலமாகி ஆல்பங்களால் ஈர்க்கப்பட்டவர் நடிகை தேஜூ அஸ்வினி. ‛பாரிஸ் ஜெயராஜ், பிளாக்மெயில், என்ன சொல்ல போகிறாய்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாம் கண் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் கூறுகையில், லவ்வர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரு சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீ கவுரி பிரியா நடித்திருந்தார் . அதேபோல் டிமாண்டி காலனி 2 படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் ஒரு சில காரணங்களால் பண்ண முடியவில்லை. அந்த கதாபாத்திரத்தில் பின்னர் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார் என்றார்.

இந்த இரண்டு வெற்றி படங்களையும் மிஸ் செய்ததற்கு சற்று வருத்தப்படுகிறார் தேஜூ அஸ்வினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !