உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து

ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து

தமிழில், ‛ஓ மை கடவுளே, டிராகன்' ஆகிய படங்களை படங்களை இயக்கியவர் அஷ்வத் மாரிமுத்து. இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் பேசப்படுகிற இயக்குனர் ஆனார். இவர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை இயக்குவது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் அந்த பட போட்டோஷூட் முடிந்துள்ளது. அதில் ரஜினி மகனாக டிராகன் பட ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக தகவல். அதேபோல், சிம்புவை வைத்து அவர் இயக்கும் பட விவாதமும் முடிந்துள்ளது. விரைவில் அல்லது அவரின் கமிட்மென்ட் முடிந்தவுடன் சிம்பு படம் தொடங்கும் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அஷ்வத் மாரிமுத்து அடுத்தடுத்து ரஜினி, சிம்பு படத்தை இயக்குவது உறுதி ஆகி உள்ளது. இந்த படங்களை முடித்தபின் டிராகனுக்கு பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இவர் இயக்க உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !