கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்!
இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தொடங்குவதில் இன்னும் கால அவகாசம் ஏற்படும் என்பதால் இதற்கிடையில் மாரி செல்வராஜ் குறுகிய கால கட்டத்தில் 'மஞ்சணத்தி' என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைக்கின்றார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில் கதாநாயகனாக கதிர் நடிக்கவுள்ளார். மற்றும் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன், கயாடு லோஹர் என இருவரும் நடிக்கவுள்ளனர். கூடுதலாக ஒரு புதுமுக நடிகையும் நடிக்கவுள்ளார். அவர் யார் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இந்த படத்திற்காக முதலில் கயாடு லோஹர் தான் நடிக்கவுள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பாரா? இல்லையா? என்கிற சந்தேகத்துடன் ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்துள்ளார். அந்த டெஸ்ட் ஷூட்டில் கயாடு லோஹர் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார் மாரி செல்வராஜ் . இந்த படம் வெளியான பிறகு கயாடு லோஹர் இதுவரை தன் திரைப்பயணத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரத்தையும் மறக்கடித்து விடும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.