உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விளையாட்டு தொடர்பான படத்தில் பவிஷ்

விளையாட்டு தொடர்பான படத்தில் பவிஷ்

நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ், ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தனுஷ் இயக்கினார். சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. அடுத்து 'லவ் ஓ லவ்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

பவிஷ் நடித்த இந்த இரண்டு படங்களும் இளைய தலைமுறையை கவரும் வகையில் காதல் கதையை மையப்படுத்தி உருவானவை. இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தில் நாயகனாக பவிஷ் நடிக்க போகிறார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், விளையாட்டு தொடர்பான கதையில் இப்படம் உருவாகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Sappanidurai Durai
2026-05-24 19:13:33

வலைப்பேச்சு காப்பியா


KayD
2026-05-24 03:18:08

விளையாட்டு படம் னு solreenga என்ன விளையாட்டு னு சொல்லல இவனுக்கு கோலிகுண்டு.. தாயம்.. Snake and ladder ok thaan


KayD
2026-05-24 03:15:10

படம் பேரு என்ன playboy aa.. விளையாட்டு பையன் போங்க சார் நீங்க