உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு': இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா

'கருப்பு': இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா


சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'கருப்பு'. இப்படம் தமிழக வசூலாக 80 கோடியைக் கடந்ததாக அதன் வினியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நேற்று அறிவித்திருந்தார்.

தெலுங்கில் 15 கோடி வசூல், கேரளாவில் 7 கோடி, கர்நாடகாவில் 11 கோடி, வட மாநிலங்களில் சுமார் 2 கோடி வசூல் என இந்தப் படம் தற்போது இந்திய அளவில் சுமார் 115 கோடியை வசூலித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்திய அளவில் தனது முதல் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளார் சூர்யா. இதை சாதிக்க சூர்யாவுக்கு 29 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த 'சிங்கம் 2' படம் 90 கோடிக்கும் கூடுதலாக வசூலித்திருந்ததுதான் அவரது அதிகபட்ச இந்திய வசூலாக இருந்தது.

தமிழகத்தில் 80 கோடி வசூல் என்பது இந்த வார இறுதியில் 100 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கடந்தால் தமிழகத்தில் தனது முதல் 100 கோடி வசூலை சூர்யா பெறுவார். அத்தோடு இப்படம் 200 கோடி வசூலையும் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !