உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா

சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் 'கருப்பு' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவுக்கு இது ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனால் பல தரப்பில் இருந்தும் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தளத்தில், சூர்யா அண்ணாவின் கருப்பு (தமிழ்), வீரபத்ருடு (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கிடைத்து வரும் அபரிமிதமான வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தியேட்டர்கள் மீண்டும் அதிர்கின்றன. சூர்யா அண்ணா காட்டும் அர்ப்பணிப்பிற்கு இந்த வெற்றி தகுதியானது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அண்ணா தயவுசெய்து ஒரு நல்ல விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதில் அளித்த சூர்யா, நன்றி தம்பி, எது நல்ல சுற்றுலா தளம் என சொல்லுங்கள்” என கேட்க, இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்கள் சிலவற்றின் பட்டியலை அனுப்பியுள்ளார். “இந்தியாவிலேயே தங்கி இங்கேயே சுற்றுப்பயணம் செல்லுங்கள் என்று பிரதமரே கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதால் உள்ளூர் பட்டியலை அனுப்பியதாகவும் நகைச்சுவையாக பதில் அளித்தார் விஜய் தேவரகொண்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !