ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்!
'தி ராஜா சாப்' படத்தை அடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து வருகிறார்கள். அதேபோல் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் 'ஸ்பிரிட்' படத்திலும் இன்னொரு பக்கம் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தில் அவருடன் டிரிப்டி டிம்ரி, விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ரொமான்டிக் காட்சிகள் முதற்கட்டமாக படமாக்கப்பட்ட நிலையில் தற்போது பிரபாஸுக்கும் விவேக் ஓபராய்க்குமிடையே ஆக்ஷன் காட்சி ஹைதராபாத்தில் உள்ள கொம்பல்லியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், ஸ்பிரிட் படம் 2027 மார்ச் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில், கல்கி- 2 படம் 2027 டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்கள் தவிர, 'பவுஸி' என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரபாஸ்.