உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'?

சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'?


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'கருப்பு'. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே, இப்படத்தின் காட்சிகள் சில படங்களின் காப்பி என ஒருவர் எழுதியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“ஓ மை காட், காந்தாரா, லயர் லயர், சப்த சாகரதாச்சே எல்லோ' உள்ளிட்ட சில படங்களின் காட்சியை அப்படியேவும், சிலவற்றை சற்றே மாற்றியும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி 'கருப்பு' படத்தில் காப்பியடித்துள்ளாராம்.

ஆர்ஜே பாலாஜி இதற்கு முன்பு இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' படம் கூட ஹிந்திப் படமான 'பிகே' படத்தின் உல்டா தான் என்று கூட பின்னாளில் அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இப்படி தன்னுடைய படங்களில் காப்பியடிக்கும் வேலையைப் பார்த்துவிட்டு, படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றையும் பயன்படுத்தி, அதில் அவரையும் 'காப்பிரைட்' விவகாரத்தில் கிண்டலடிக்கும் வசனத்தையும் வைத்திருப்பதையும் இளையராஜா ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !