உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு

உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்டுள்ளார். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருந்து வந்தார் ரவி. இந்நிலையில் தொடர்ந்து வந்த அவதூறுகள் மற்றும் சைபர் அட்டாக்கால் ரவியை விட்டு பிரிவதாக ஆர்த்தி தெரிவித்தார், அதோடு சென்னையை விட்டு வெளியேறி விட்டேன். இனி எந்த வலைதளங்களில் நான் செயல்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வளவு காலம் இன்ஸ்டாவில் அமைதி காத்து வந்த ஆர்த்தி இப்போது, ‛‛தூங்கும் சிங்கத்தை எப்போதும் எழுப்ப கூடாது. அதுவும் அவள் ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான அமைதியை பலவீனம் என்று தவறாக நினைக்கக் கூடாது. தேவைப்பட்டால், என் குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க, நான் என் வசதியான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து உண்மையோடு உலகை எதிர்கொள்வேன். ஏனெனில், உண்மை எப்போதும் வெல்லும்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்த்தியின் பதிவிற்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் ‛‛ஒரு தாயுடன் ஒரு போதும் மோதாதே. நீயோ தன் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம். என் செல்லமே, உனக்கு என் வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் தரப்பு ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சில மணிநேரத்திற்கு முன்பாக இந்த பதிவை ஆர்த்தி போட்டுள்ளார். ரவி மோகன் தன் பேட்டியின் போது ஒரு மூன்றெழுத்து இட்லி நடிகை தனது குடும்பத்தை கெடுத்தார் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

PV
2026-05-17 10:15:55

Kushbu- கண்ணகி நி problem பண்ணாம இரு