தத்தெடுத்த பூனைக்கு குடும்பப் பெயரைச் சூட்டிய ஸ்ருதிஹாசன்
ADDED : 11 hours ago
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வீட்டு விலங்குகள் மீது பாசம் அதிகம். அவரது மும்பை வீட்டில் ஏற்கெனவே பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது புதிதாக ஆறு மாத வயதுடைய பூனைக்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார்.
யாரோ ஒரு பெண்மணி வளர்த்து வந்த அந்த பூனைக்குட்டியை ஸ்ருதிஹாசனின் தோழி ஒருவரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அலர்ஜி வருவதால் மேற்கொண்டு அந்த குட்டியை வளர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த ஸ்ருதிஹாசன் அந்த பூனைக்குட்டியை தத்தெடுத்து தனது வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்துள்ளார். அந்த குட்டிக்கு 'அஸ்லன் ஹாசன்' என்ற பெயரையும் சூட்டியுள்ளார். ஸ்ருதியின் வீட்டில் உள்ளவர்கள் 'ஹாசன்' என்ற பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதைத் தனது பூனைக்குட்டிக்கும் அவர் சேர்த்துள்ளார்.