உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

சில நாட்களுக்கு முன்பு ஹிந்தியில் உருவாகி தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியான படம் 'கிருஷ்ணாவதாரம் ; பார்ட் 1: தி ஹார்ட்'.. கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்த்திக் கஜார் என்பவர் இயக்கியுள்ளார். சித்தார்த் குப்தா, ஸ்மிதா பட், ஜாக்கி ஷெராப், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்புக் காட்சி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. லக்னோ பவனில் நடைபெற்ற இந்த சிறப்புக் காட்சியில் முதல்வருடன் ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். படத்தைப் பார்த்த பிறகு, சனாதன கலாச்சாரம் மற்றும் இந்திய மரபுகளைப் பிரம்மாண்டமாக இப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. இது கிருஷ்ணரின் வாழ்க்கையை மனிதநேயப் பார்வையில் சித்தரிக்கிறது, என்று பாராட்டியுள்ள யோகி ஆதித்யநாத், இப்படத்திற்கு வரி விலக்கு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்து இருக்க, மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படத்தின் சிறப்புக் காட்சிகளைத் திரையிட ஏற்பாடு செய்யுமாறு தகவல் தொடர்புத் துறைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இப்படத்தில் ஆளுநர் ஆனந்திபென் படேலின் பேத்தி சமஸ்கிருதி, சத்தியபாமா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !