காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படம் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு 2015ல் காஞ்சனா 2, 2019ல் காஞ்சனா 3 படங்களையும் இயக்கி, நடித்து வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இந்த மூன்று படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. பின்னர் 2020ம் ஆண்டில் காஞ்சனா படத்தை லட்சுமி என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். அப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது காஞ்சனா 4-ம் படத்தையும் இயக்கி நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இதில் அவருடன் பூஜாஹெக்டே, நோரா பதேகி ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிரடியான போஸ்டரை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் லாரன்ஸ்.
த்ரில்லிங்கான பின்னணி கொண்ட அந்த போஸ்டரில் லாரன்ஸ் சிக்ஸ் பேக் உடலுடன் இரண்டு கைகளிலும் சங்கிலியுடன் ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் . அதோடு, காஞ்சனா 4 படத்தில் பயம் மற்றும் மெய்சிலிர்ப்பின் உண்மையான கலவையை உணருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் இசை மற்றும் பிரத்யேக அப்டேட்டுகள் விரைவில் வெளியாகின்றன என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.