கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள விஜய் நடித்துள்ள கடைசி படம் 'ஜனநாயகன்'. அப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே தேர்தல் முடிவுகள் வந்த பின்பு பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலானது. 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் அவர் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ஒரு போஸ்ட்டில் “தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?” என்று எழுதப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டி, பக்கத்தில் நின்றிருந்த விஜய்யை நோக்கி கண்ணசைத்திருந்தார்.
“இது நடப்பதற்கு முன்பே நான் யூகித்திருந்தேன். கனவில் இருந்தது நிஜமானது விஜய் சார்,” என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் இன்று பதவியேற்ற நிலையில் நேற்று அவர் பகிர்ந்திருந்த சில கிளாமர் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அவர் நடித்து வரும் ஹிந்திப் படமான 'ஹை ஜபவானி தோ இஷ்க் ஹோனா ஹை' என்ற ஹிந்திப் படத்தின் பாடலான 'தேரா ஹோ ஜான்' நேற்று வெளியானது. அதைப் பிரபலப்படுத்தும் விதத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படியான கிளாமர்ல புகைப்படங்கள் அவர் பகிர்ந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.