உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல்

300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'கூலி'.

அப்படத்தில் இடம் பெற்ற 'மோனிகா' பாடல் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய அந்தப் பாடல் அதன் இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், பூஜாவின் அசத்தல் நடனத்துக்காகவும் ரசிகர்களைக் கவர்ந்தது.

விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அந்த லிரிக் வீடியோ பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 10வது பாடலாக இப்பாடல் உள்ளது.

இதற்கு முன்பு, “ரவுடி பேபி, அரபிக் குத்து, டம் டம், ஒய் திஸ் கொலவெறி, அச்சோ அச்சோ, காவாலய்யா, வாயாடி பெத்த புள்ள, டானு டானு, மொராக்கா” ஆகிய பாடல்கள் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.

'மோனிகா' பாடலின் முழு வீடியோ யு டியுப் தளத்தில் 130 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !