உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்த்த சில சினிமா பிரபலங்கள்

விஜய்க்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்த்த சில சினிமா பிரபலங்கள்

தமிழ்த் திரையுலகத்திலிருந்து அரசியலில் இறங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அவருடைய கட்சியின் முன்னணி நிலவரத்தைப் பார்த்து நடிகர்கள், நடிகைகள், திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

அதன்பின் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கூட வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், தெலுங்கு, மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் கூட வாழ்த்து தெரிவித்தார்கள். இன்றும் கூட அது தொடர்ந்து வருகிறது.

அதேசமயம் சில நடிகர்கள், நடிகைகள் இன்னும் எந்தவிதமான வாழ்த்துகளையும் அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் சேதுபதி, நயன்தாரா போன்றவர்கள் எந்த வாழ்த்தும் சொல்லவில்லை. அஜித்தும் கூறவில்லை, ஆனால் போனில் பேசியதாக ஒரு தகவல் மட்டுமே வந்துள்ளது. ஒருவேளை விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்பு வாழ்த்து தெரிவிக்கலாம் என காத்திருக்கிறார்களோ ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !