கருப்பு பட பிரமோஷன்களில் திரிஷா கலந்து கொள்வாரா?
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‛கருப்பு' படம் மே 14ம் தேதி வெளியாக உள்ளது. மதுரையில் நடந்த கருப்பு பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்ற ரீதியில் கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டார் திரிஷா. அது குறித்து படக்குழுவும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பாடல் வெளியீட்டு விழா முடிந்துவிட்டது, அடுத்த கட்ட பிரமோஷன்களை படக்குழு தொடங்குகிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கும் சென்று படத்தை விளம்பரப்படுத்துகின்றனர். அதில் சூர்யாவுடன் இணைந்து திரிஷாவும் கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியும், திரிஷாவும் நல்ல நண்பர்கள். மூக்குத்தி அம்மன் 2வை திரிஷாவை வைத்து அவர் எடுக்க இருந்தார். அது ரத்தாகவே, இந்த படத்தில் நடிக்க வைத்தார். அதனால், பிரச்னைகள் இருந்தாலும் சரி செய்யப்பட வாய்ப்பு. தவிர, தேர்தல் ரிசல்ட்டால் திரிஷாவும் உற்சாகமாக இருக்கிறார். அடுத்த கட்ட கருப்பு பட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.