உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எக்ஸாம்' தொடருக்காக அடி வாங்கினேன் : அதிதி பாலன்

'எக்ஸாம்' தொடருக்காக அடி வாங்கினேன் : அதிதி பாலன்

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'எக்ஸாம் ' . துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 7 அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த தொடர் வரும் 15ம் தேதி முதல் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.

பெரிய குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞரான அதிதி பாலன் 'அருவி' படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 'ஒரு பேஷன் காரணமாக இந்த படத்தில் நடித்ததாகவும இனி நடிக்க போவதில்லை என்றும் வழக்கறிஞராக பணியாற்ற போவதாகவும்' சொன்னார். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கவில்லை. பின்பு அவர் தனது முடிவை மாற்றிய பிறகு 4 வருடங்களுக்கு பிறகு 'குட்டி ஸ்டோரி' வெப் தொடரில் நடித்தார். 'கோல்ட் கேஸ்' என்ற மலையாள பத்தில் நடித்தார். 'சாகுந்தலா' தெலுங்கு படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி கருமேகங்கள் கலைகின்றன, வேலா, கேப்டன் மில்லர், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஏற்கெனவே 'நவராசா' என்ற வெப் தொடரில் நடித்திருந்த அதிதி தற்போது 'எக்ஸாம்' தொடரில் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : இந்த தொடரில் மரமல்லி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். துஷாராவும் நானும் அடித்துக் கொண்டோம்.

இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குனர் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால் ஒப்புக்கொண்டேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !