sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

நீ யார் என்பது உனக்கு தெரியுமா?

/

நீ யார் என்பது உனக்கு தெரியுமா?

நீ யார் என்பது உனக்கு தெரியுமா?

நீ யார் என்பது உனக்கு தெரியுமா?


ADDED : டிச 13, 2007 10:02 PM

Google News

ADDED : டிச 13, 2007 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நோய்கள் பல காரணங்களால் வருகின்றன. ஆனால், இறைவன் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் சாதனைக்கு நோய்வரும்.

*காமவேகம் எல்லாவற்றிலும் மிகப் பெரிய தடையாகும்.

பேராசை, கோபம், பொறாமை இவைகள் காமத்தின் தோழர்கள் ஆவார்கள்.

நீ உன்னுள் நிறைய காம சிந்தனையை வைத்துக் கொண்டு அவை செயல்வடிவில் வெளிப்படுவதைத் தடுக்க முயன்றால், அதை உள்ளே வைத்து மேலேறி உட்காருவதாகும். கோபம் மற்றும் பிற வெறிகள் விஷயத்திலும் இப்படியே. அவற்றை வெளியே எறிய வேண்டும்; உன் உள்ளே அவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது.

* மாமிச உணவினால் வரும் இடர்பாடுகளை சைவஉணவு தவிர்க்கிறது. ஆனால், சைவ உணவினால் மட்டும் புலனடக்கம் வந்து விடாது.

* ஒவ்வொருவனுக்கும் அவனவன் அடைய வேண்டிய ஓர் லட்சியம், ஓர் ஊழ் உள்ளது. ஒரு பிறவியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பது ஒரு சிறு நிகழ்ச்சி மட்டுமே.

*வருங்கால வாய்ப்பென்பது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறலாம். அப்போதும் அது யோக சாதனை மூலமே நிறைவேறும்.

இறைவனது இச்சா சக்தி எல்லாவற்றின் மீதும் வேலை செய்கிறது. அது எதை வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். இறைவனது அருள், உதவி செய்யவும் காப்பாற்றவுமே வருகிறது.

* முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் நம் மிகச் சக்தி வாய்ந்த சாதனங்களாகும்.

* இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி அந்தமற்றது. ஓர் உருவிலிருந்து வெளிவருவதானது மற்றுமோர் உருவத்தில் புகுதற்கேயாகும்.



Trending





      Dinamalar
      Follow us