திறமையற்று வாழ்ந்து என்ன பயன்?

நம் இதயம் எதை விரும்புகிறதோ அதை நல்லது என்றும், எதை வெறுக்கிறதோ அதை தீயதென்றும் நாம் முடிவு கட்டி விடுகிறோம். ஆனால், நாம் வெறுக்கும் மனிதர்களிடமும் நன்மை இருக்கும். ஒழுக்கசீலர்கள் என்று நம்புவோரிடம் தீமை இருக்கும். இதில் வியப்புக்கோ அல்லது திகைப்புக்கோ இடமில்லை. இறைவனின் இயக்கம் அப்படிப் பட்டது. ஒவ்வொருவரது செயலையும் ஆராயும்போது, யார் மீதும் நமக்கு வெறுப்பு தோன்றாது. அமைதியான மனதுடன் இவ்விஷயங்களை சிந்தித்துப் பார்த்தால் நம் குழப்பம் நீங்கி, மனத்தெளிவு கிடைக்கும்.

நான் கடவுளை பெண்ணாகக் கண்டபோது அன்பை பற்றி ஓரளவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், நானே ஒரு பெண்ணாகி என் தலைவனாகிய கடவுளிடத்தில் சரணாகதி அடைந்தபோது, அன்பின் ஆழத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. கடவுளின் கண்களில் அற்பமானது ஏதுமில்லை. உங்கள் கண்களில் அற்பமானது எதுவும் இருக்க வேண்டாம். ஒரு பேரரசை நிறுவுவதில், கடவுள் எவ்வளவு தெய்வீக சக்தியை அருளுகிறாரோ அதே அளவுக்கு ஒரு கிளிஞ்சலை உருவாக்குவதிலும் அருளுகிறார். இன்பத்தில் திளைத்திருக்கும் ஒரு திறமையற்ற அரசனாக இருப்பதைவிட, ஒரு நல்ல காலணி தைக்கும் தொழிலாளியாக இருப்பதே மேன்மையானதாகும்.

-அரவிந்தர்