/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருபானந்த வாரியார்
/
இரண்டு ஆசைகளை விடுவோம்!
/
இரண்டு ஆசைகளை விடுவோம்!
ADDED : டிச 08, 2010 01:12 AM

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து 'நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும்.
நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற அறிவினால் அறிய வேண்டும்.
* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.
* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.
* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.
* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்!
- வாரியார்