
பிரிந்த தம்பதி ஒன்று சேரணுமா... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள கங்காதீஸ்வரரை பிரதோஷத்தன்று தரிசனம் செய்யுங்கள்.
ஒரு சமயம் சிவனின் கோபத்திற்கு ஆளானார் துர்வாசர். அதில் இருந்து விடுபட வேண்டும் என இங்கு சிவலிங்கத்தை நிறுவி தினமும் அபிேஷகம் செய்தார். முனிவரை சோதிக்க விரும்பிய சிவன் அபிேஷகம் செய்யும் குளத்தின் நீரை வற்றச் செய்தார். மறுநாள் அதில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. தினமும் நீராடி வழிபட்டோமே இப்போது இப்படியாகி விட்டதே...
இதுவும் சோதனையா... என சிவனை சரணடைந்தார்.
அப்போது சிவலிங்கத்தின் அருகில் ஊற்று பீறிட்டது. அதில் நீராடிய துர்வாசர் மகிழ்ச்சியில் திளைத்தார். அன்று முதல் சுவாமிக்கு 'கங்காதீஸ்வரர்' எனப் பெயர் வந்தது. இங்குள்ள அம்மனுக்கு 'பங்கஜவல்லி' என்பது திருநாமம்.
இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. காலப்போக்கில் கோயில் சிதிலமடைய திருப்பணி செய்யப்பட்டு 2014ல் கும்பாபிேஷகம் நடந்தது.
அடிக்கடி கருநாகம் ஒன்று சிவலிங்கத்தை தழுவியபடி செல்வதால், சர்ப்பதோஷம் போக்கும் தலமாக இது உள்ளது.
தொழில், திருமணம், குழந்தைப்பேறு என எதிர்பார்ப்பு அனைத்தும் கங்காதீஸ்வரர் அருளால் நிறைவேறுகிறது.
எப்படி செல்வது: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், பவுர்ணமி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 90433 78922, 94443 60042
அருகிலுள்ள கோயில்: செய்யாறு வேதபுரீஸ்வரர் 35 கி.மீ., (நினைத்தது நிறைவேற...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94433 45793