ADDED : ஜூன் 11, 2026 10:43 AM

தாரணி அமராபரன், மதுரை: பூஜை நேரத்தை தவிர மற்ற நேரத்தில் மணி அடிக்கக் கூடாதா...
பூஜையின் போது தான் அடிக்க வேண்டும். மற்ற நேரத்தில் அடிப்பது பாவம். இனியும் இந்த தவறை செய்யாதீர்.
பார்த்திபன்.ஆர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்: துர்கைக்கு விளக்கேற்ற...
ராகு காலத்தில் ஏற்றுங்கள். அதுவும் வெள்ளி, ஞாயிறு ஏற்றது.
விஜி.எம், பல்லாவரம், செங்கல்பட்டு: மாணவர்கள் ஆன்மிகச் சுற்றுலா போகலாமா...
தாராளமாக போகலாம். இதனால் மனவலிமையும், மகிழ்ச்சியும் பெறுவர்.
வித்யா.ஸ்ரீ, சுரண்டை, தென்காசி: சுப்ரபாதத்தை மாலையில் கேட்கலாமா?
சுப்ரபாதம் என்றால் 'சுபமான அதிகாலை'. எனவே காலையில் கேட்பது நல்லது.
ராதா.மு, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி: நவக்கிரக ஹோமத்தை வீட்டில் நடத்தலாமா...
கணபதி ஹோமத்துடன் நவக்கிரக ஹோமத்தை சேர்த்து நடத்துங்கள்.
ரமணன்.கு, திருச்சுழி, விருதுநகர்: வீட்டில் பகவத் கீதையை வழிபடலாமா?
வழிபடுவது, படிப்பது, அதன்படி நடப்பது மிகவும் நல்லது.
துரை.மா, தோவாளை, கன்னியாகுமரி: செருப்பை தானம் செய்தால்...
மன அமைதியும், உடல் நலமும் கிடைக்கும்.
சுந்தர்.சி, பசவன்குடி, பெங்களூரு: மருத்துவர் ஆலோசனைப்படி, வீட்டிற்குள் செருப்பு அணிகிறேன். தவறா...
சூழலுக்கு தக்கபடி வாழ்வது தவறில்லை. ஆனால் அந்த செருப்பை வீட்டிற்கு வெளியே பயன்படுத்தக் கூடாது.
சிவா.ரா, ஆனைமலை, கோயம்புத்துார்: யாரிடமும் சாபம் வாங்க கூடாதாமே...
ஆம். நல்லவர் மனதை புண்படுத்தினால் அது சாபமாக மாறும்.
