தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 03, 2026 11:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 கணேஷ்.கா, திருநின்றவூர், திருவள்ளூர்: கடனால் சிரமப்படுகிறேன். வழி காட்டுங்கள்?

கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை சிவனை வழிபடுங்கள்.

சுந்தர்.மு, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: கொடுத்த பணத்தை இரவில் வாங்கலாமா?

எந்த நேரத்திலும் வாங்கலாம்.

சுபா.எம், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்துார்: வராகியை வழிபட்டால்…

எதிர்மறை எண்ணம் மறையும். எதிரி தொல்லை தீரும்.

புவனா.எஸ், ஆமத்துார், விருதுநகர்: செயலில் தடை, தாமதம் ஏற்பட்டால்...

துர்கையை வழிபடுங்கள். பிரச்னை தீரும்.

கோமதி.கே, வீரவநல்லுார், திருநெல்வேலி: சித்தர்களை வழிபட ஏற்ற நேரம்...

பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 - 6:00 மணி.

ராஜா.ரா, ராமமூர்த்தி நகர், பெங்களுரு: வழிபாட்டுக்கு சிறந்தது காலை நேரமா...

ஆம். ஒரு நாளின் தொடக்கம் காலை. அப்போது வழிபட்டால் அன்று நல்லது நடக்கும்.

பரிமளா.பி, உத்தமபாளையம், தேனி: தர்மம் என்றால்...

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இல்லாமல் வாழ்வதே.

விமல்.கு, வேளச்சேரி, சென்னை: கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டால்...

புண்ணியம். குடும்பம் தழைக்கும். நல்ல குழந்தை பிறக்கும்.

புருஷோத்தமன்.ஆர், பூதப்பாண்டி, கன்னியாகுமரி: மாடக்கோயில் என்றால்...

கோட்செங்கச் சோழனால் கட்டப்பட்ட கோயில்கள். இங்கே யானை உள்ளே செல்ல முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us